3. இயற்பகை நாயனார்

அமைவிடம் : temple icon.iyarpagaiyar
வரிசை எண் : 3
இறைவன்: பல்லவனேஸ்வரர்
இறைவி : சௌந்தரநாயகி
தலமரம் : புன்னை
குலம் : வணிகர்
அவதாரத் தலம் : பூம்புகார்
முக்தி தலம் : திருச்சாய்க்காடு
செய்த தொண்டு : அடியார் தொண்டு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : மார்கழி - உத்திரம்
வரலாறு :சிவனடியார்கள் எதை விரும்பிக் கேட்டாலும் அதனை உடனே தரும் இயல்பினர் இந்நாயனார். இவரது தொண்டின் திறத்தைச் சோதிப்பதன் மூலம் இவரது பெருமையை உலகுக்கு உணர்த்த விரும்பிய இறைவன் ஒரு அடியவர் வேடத்தில் வந்து நாயனாரது மனைவியையே கேட்கிறார். சிறிதும் யோசிக்காமல் எதிர்த்த உற்றார் உறவினர் அனைவரையும் வெட்டி வீழ்த்தி அடியவருடன் தம் மனைவியை அனுப்புகிறார். அந்த நிலையில் இறைவன் காட்சி கொடுத்து தம் திருவடி நிழலில் சேர்த்துக்கொள்கிறார்.
முகவரி : அருள்மிகு.பல்லவனேஸ்வரர் திருக்கோயில், காவிரிப்பூம்பட்டினம், சீர்காழி வட்டம்– 609105. நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 08.30
தொடர்புக்கு : பாலசுப்ரமணிய சிவாசாரியார் 04364 260151

இருப்பிட வரைபடம்


அக்குலப்பதிக் குடிமுதல் வணிகர்
 அளவில் செல்வத்து வளமையின் அமைந்தார்
செக்கர் வெண்பிறச் சடையவர் அடிமைத்
 திறத்தின் மிக்கவர் மறைச் சிலம்பு அடியார்
மிக்க சீரடியார்கள் யாரெனினும்
 வேண்டும் யாவையும் இல்லை என்னாதே
இக்கடல்படி நிகழமுன் கொடுக்கும்
 இயல்பின் நின்றவர் உலகு இயற்பகையார்
    	           -பெ. பு. 405
பாடல் கேளுங்கள்
 அக்குலப்பதி


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க